பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 182 திருக்குறட் குமரேச வெண்பா Life without industry is guilt, and industry without art is brutality. (Ruskin) "முயற்சி யில்லாத வாழ்வு குற்றம்: அறிவில்லாத முயற்சி மிருகத்தனமாம்' என்னும் இது இங்கு அறிய வுரியது. அறிவோடு கலந்த முயற்சியே உயர்ச்சியுடைய தாய் நல்ல ஊதியங்களே அருளி வருகின்றது. அறிவும் ஆள்வினையும் அமைந்த அளவே அந்த மனிதன் எங்த வகையிலும் உயர்ந்து வருகிருன். அறிவு கழியின் மடையன் ஆ கி ரு ன்; ஆள் வினே ஒழியின் மடியன யிழிகிருன். உழைப்பே உயிர்ப்பு: உழையாதவன் பிழையாதவய்ை அழிகிருன். மடிபுகுந்த அன்றே அவன் மடிந்தவன் ஆகின்ருன். மடமை இருள்; மடிமை மருள். இந்த இரண்டும் தன் னே அணுகாமல் பேணி வருப வன் பெரிய கல்விமானப் அரிய செல்வனப்ப் பெருகி உயர்கிருன் . GO to the ant, thou sluggard; consider her ways, and be wise. (B. P. 6.6) "சோம்பேறியே : எறும்பினிடம் போய் அதன் முயற்சிகளேப் பார்: உணர்ச்சியாய் வாழ்!” என இது உணர்த்தியுளது. உழைத்துவரும் அளவே மனிதனது ஆற்றல் ஏற்ற மாய் ஒளி பெற்று வருகிறது; ஆள்வினே ஒ ழி யி ன் உறுதியும் ஊக்கமும் உடனே மறைய நேர்கின்றன். Power ceases in the instant of repose. (Self-reliance) "முயற்சி ஒழிந்தபோதே ஆற்றல் ஒளிந்து போகி றது' என்னும் இது ஈண்டு உணர்ந்து கொள்ளவுரியது. உரிய கருமங்களேக் கருதிச் செய்து வ ரு ப வ ன் உரம் உடையய்ைப் பெருமை பெற்று வருகிருன்.