பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18.4 திருக்குறட் குமரேச வெண்பா அன்பின் சேவல் துணையிழந்த அன்றில் பெடை போல் அழுது இரங்கி, வன்பிற் செலவும் கருமுதிர்ந்த வருத்தம் உறலால் நடை மாய்ந்து முன்புற்று அறியா நெடுங்கான வாவிக் கரை யை முடுகினள். (2) (பிர மோத்தர காண்டம்: 6) உரிய கணவனேயும், பெரிய அரச திருவையும் இழந்து அரசி பரிசு குலைந்து போயுள்ள பரிபவ நிலை மையை அறிந்து வருந்துகிருேம். எதிர்வதை எண்ணி புணராமல் மன்னன் மடிபடிந்திருந்தமையால் மாண் புடைய அரசை இழந்தான்; குடியும் அழிந்தது; பழியும் படிந்து பரிந்து இறந்தான் என்று நாடும் ந க ர மு. ம் இரங்கி கின்றன. மனிதனிடம் மடிபடிந்தால் அவன் குடி மடிந்து போம்; அவனும் குற்றமா யழிந்து போவான் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து தெளிந்தது. குற்றம் படிந்து குடிமடிந்து போகுமே உற்ற மடியால் உணர். மடியில் மடியாதே. immo-mom. கெடுவார் நிலை. 805 கேடுற்ருன் முன்னம் கிரீவன் மடிமறவி கூடியதால் என்னே குமரேசா-கோடும் நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (டு) இ-ள். குமரேசா! மடியும் மறவியும் மருவிய அயக்கிரீவன் ஏன் கெட்டு அழிந்தான்? எனின், நெடுநீர் மறவி மடி துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் என்க. கேட்டுக்கு உரிய அறிகுறிகள் தெரிய வந்தன. தாமதமும் மறப்பும் சோம்பலும் துரக்கமும் ஆகிய இந்த நான்கும் அழியும் இயல்பினர் விழையும் கலம்.