பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2836 திருக்குறட் குமரேச வெண்பா முன்னதாக உணர்ந்து வினே செய்யாதவன் பின் இழிந்து வருந்துவதை இதில் உணர்ந்து கொள்கிருேம். பருவம் தவருமல் செம்மையாகச் செய்துவரும் செயல்வழியே எல்லா நன்மைகளும் உளவாகின்றன. செயல் பழுதால்ை துயர் பெரிதாம். அயர்ந்து விட்ட கருமம் அழுது முட்டிலுைம் மீளாது. இந்த முதுமொழி இங்கே மதி தெளிய வுரியது. மறதியுடையவன் ஒரு கலமும் அடையான் என்ருச் முன்பு. இதில், அல்லல் பலவும் அவன் அடைந்து வருந்துவான் என்கின்ருர். ■ வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும். (குறள் 433) முன்னுறக் காவாமல் இழுக்கி கின்றவனது அழி நிலையை முன்னரும் இவ்வாறு உணர்த்தியிருக்கிருச். சிறிய மறதி பெரிய துயரமாய்ப் பேரழிவு செய்யும் ஆதலால் அது நேராவகை நேர்ந்து செய்வதே ஆர்க்த ஆண்மையாம். பிழை புரிந்து விட்டுப் பின்பு பேதையா யிருந்து அழுவது கழி விரக்கமா யிழிவுறுத்தும். யாதும் தீது நேராமல் யாண்டும் விழிப்புடன் பாது: காத்து வருவது அரசனுக்குப் பிறப்புரிமையான கடமை யாம். காப்பு கிலே பொச்சாப்பால் பிழைபடின் அது பெரிய பழியாய் எவ்வழியும் இழிவே தரும். - தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்று உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும் பொன் னினே ப் போல் போற்றிக் காத்துய்க்க காவாக்கால் மன்னிய ஏதம் தரும். (ஆசாரக் கோவை, 95) பொன்னே ப்போல் .ே பா ற் றி க் காக்கவேண்டிய உரிமைப் பொருள்களே ப் பெருவாயின் மு ன் வரி ய க் இங்ங்னம் நன்கு உணர்த்தி யுள்ளார். முன் அறிந்து காவாமல் மறந்தவர் பின் வருங்துவச். இது கயன் கண்ணும் சங்க சூடனிடமும் அறிய வங்தது.