பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.188 திருக்குறட் குமரேச வெண்பா மடியால் விளையும் குடிகேடுகளையும், அதனை ஒழித் தவர்க்கு உளவாம் நன்மைகளேயும் இது விளக்கியுளது. கலதி =மூதேவி: கேடு. துயிலே இறுதியில் வைத்தது அதன் இயல்பை எண்ணி அறிய. உழைப்பால் நேர்ந்த களேப்பை நீக்கி ஊக்கம் தருகிற துக்கம் ஆக்கம் உடையதாம். மனித ருக்கு இதமான இனிய அந்தத் துயில் அளவுடன் அமைந்தது. அதனினும் அயலாய் மயலோடு வருகிற நெடுந்துயில் கடுங்கேடு புரிவதாம். வான் உலாம் அருணன் என்னும் மக்கள் ஆயுளின் கணக்கன் தான் எழும் முன் எழாரைச் சகத்திரக் கரத்தால் தட்டும்; ஏன் என எழார்வாழ் நாளே எண் குறைத்து எழுதிக் கொள்வான்; ஆனது கண்டு காலன் அவரிடம் அணுகு வானே. (நீதி நூல்) மனிதரது வாழ்நாளே அளவு செய்து வருபவன் அருணன்; அவன் எழுமுன் எழுபவரே ஆயுள் நீண்டி ருப்பர்: அவ்வாறு எழாமல் மடி மண்டித் துயில் கொண்டு கிடப்பவர் அகால மரணம் அடைவர் என இது குறித்துளது. குறிப்பு கூர்ந்து சிந்திக்க வுரியது. நெடு நீர், நெடு மறவி, நெடு மடி, நெடுங்துயில் என்னும் இவை கடுங்கேடுகள் உடையன. இவற்றைக் காதலித்துத் தழுவுபவர் நோதலுழந்து சாதலை அடைவச் கலன்=மரக்கலம்: கப்பல். காமக் கலன் என்றது இனியது என்று விரும்பி ஏறுபவரைச் சிறிது தூரம் ஏக்திச் சென்று நடுக்கடலில் விழ்த்தி நாசம் புரியும் சேம்தெரிய. ஏமப் புனே. (குறள், 306) என்றது போல் இனிய சேமக்கலனும் உண்டு ஆதலால் அதனினும் வேறுபாடு தெரிய இது காமக்கலன் என வங்தது.