பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2838 திருக்குறட் குமரேச வெண்பா வாக் கவர்ந்து போயினர். பின்பு போராட மூண்டு நேரே வந்து வளைந்தனர். விரைந்து பொருதனர். அப்போரில் இவன் இறந்து போனன். எதிரிகள் புரிந்து வருவதை, எதிரறிந்து காவாமல் மதி மறந்திருந்தமையால் இவன் பதி யிழந்து பாழா யழிந்தான். முன்னுறக் காவாமல் மடமையாய் இருந்தவன் பின் ஊறுபட்டுப் பேதை, யாய் இழிந்து அழிந்து படுவான் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து தெளிந்து கொண்டது. F. மந்தம் மறதி மடிகளி என்பன எந்த வழியும் இழிதுயராய்-வந்து மனிதன் உயர்வை மடித்துக் கெடுக்கும் துனியவை யாண்டும் தொடல். எண்ணிமுன் காவா திகழ்ந்திருந்தான் பின்பவன் எண்ணி யழிவான் இழிந்து முன் அறிந்து கா. 586, ஏதும் இழுக்காமல் எண்ணிஏன் கேகயன் முன் கோதின்றி நின்ருன் குமரேசா-தீதில் t இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்ப தில். (சு) இ-ள். குமரேசா ! தனது மனைவி மாட்டும் கேகயன் ஏன் மறவி யின்றி மதியுடன் மாண்புற்றிருந்தான் ? எனின், இழுக்காமை யார் மாட்டும் எ ன் று ம் வழுக்காமை வாயின் அது ஒப்பது இல் என்க. அரிய நன்மை அறிய வந்தது. மறதி யுருமை எவரிடத்தும் எக்காலத்தும் வழுவா மல் வாய்க்குமாயின் அவ்வாய்ப்பு ஒப்பற்ற பெரிய கன்மையாம். - இழுக்குதல் = தவறுதல்; பிறழ்தல்; மறத்தல். வழுக்குதல் = வழுவுதல்; கழுவுதல்; ஒழிதல்.