பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2802 திருக்குறட் குமரேச வெண்பா மைக்கு உரிய காரணம் நீங்கியவுடனே தமர் பாங்காப் வந்து பரிவுடன் உவந்து அமர்ந்திருப்பர். இயல்பாகவே உள்ளன்பு வாய்ந்தவர்; உதிர சம் பந்தம் தோய்ந்தவர் ஆதலால் உறவினர் உறவு செய லால் சிறிது திரியினும் விரைவில் திருங்திப் பொருங்தி விடும். - நெருப்பு நேரவும் தண்ணிர் வெந்நீராகிறது; அது திரவே தாகைவே அது குளிர்ந்து கொள்ளுகிறது. அது போல உறவினரும் மாறுபாடு நீங்கியவுடனே வேறு பாடு நீங்கிப் பழமையும் கிழமையும் வளமையாய்ப் பதிந்து கொள்ளுகின்றனர். இயல்பான உரிமையாளர் சில சமையம் மயலாய் மாறுபடினும் விரைவில் உறவினரா யுறுவர்; அவரை அயல் அகல விடாமல் நயமாய்த் த ழு வி க் கொள்ள வேண்டும். தமர் என்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமர் அன்மை தாம் அறிந்தார் ஆயின் , அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன் மை தம்முள் அடக்கிக் கொளல். (நாலடி 229) தமர் என்று கிழமையாய்த் தாம் தழுவிக் கொண்ட வரிடம் தமரன்மை காணப்படினும் அவரை நன்கு மதித் துப் பேணி வருக; அவர் தாமாகவே திருந்தி கல்ல. வழிக்கு வருவர் என இது நயமா உணர்த்தியுளது. சுற்றத்தைத் தழுவிக்கொள்ளும் வகையில் ஆன வரையும் குற்றத்தை மறந்து குணங்களேயே கருதி வரு வது நலமாம். பொறுமை மருவிவரும் அளவு உரிமை யாளர் உவகையாளராய்ப் பெருகி வருகின்றனர். மெய்யா வுணரின் பிறர்பிறர்க்குச் செயவதென் ? பையா ரகலல்குற் பைந்தொடி--எக்காலும் செய்யார் எனினும் த மர்செய்வர்; பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை. (பழமொழி, 109) உதவி செய்யாதவர் போல் ஒதுங்கி பிருந்தாலும் தமர் செய்வது போல் பிறர் செய்யார். மழை பருவத்