பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. டு ட | ச் சா வா ைம 2855, ஆற்றலின் களிப்பால் இரணியன் கெட்டான். வீரக் களிப்பால் சூரபன்மன் கெட்டான். காமக் களிப்பால் இராவணன் கெட்டான். மமதைக் களிப்பால் துரியோதனன் கெட்டான். இன்னவாறு மகிழ்ச்சியில் மைந்துற்று இகழ்ச்சி ஆயில் கெட்டவர் பலர். செருக்கும் களிப்பும் எவரையும் சீரழித்து இழித்துக் கெடுத்து விடுகின்றன. இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையில்ை பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை-மெச்சாது அலந்துதம் வாய் வந்த கூறும் அவரின் விலங்குகள் நல்ல மிக. (அறநெறி 122) உடல் வாழ்வு துயரம் என்று உணர்ந்து உயிர் உயர்கதியுறும் படி மறவாமல் தவம் புரிபவர் மகான்கள்: அவருடைய அருமை பெருமைகளே அறிந்து போற்ருமல் இகழ்ந்து துாற்றுபவர் இழிந்த மிருகங்களே என இது குறித்துளது. பொச்சாவா என்னும் சொல் இதில் குறித் திருக்கும் பொருளேக் கூர்ந்து அறிக. களித்தவர் கெடுவர் என்பதை உள்ளி உணர்ந்து உள்ளம் தெளிந்தவர் எள்ளல் புரியாது இனிது வாழ்வர். இவ்வுண்மை இரணியன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். இவன் சூரபன் பனுடைய இளேய புதல்வன். பானு: கோபனுக்கும், அக்கினிமுகனுக்கும் பி ன் பு பிறந்த தம்பி. அன்பு அறிவு அமைதி முதலிய உயர் கலன்கள் இவனிடம் இயல்பாய் அமைந்திருந்தன. தனது சிறிய தங்தையாகிய தாரகன் முருகவேளால் மாண்டு மடிக் ததை அறிந்ததும் இவனுக்கு நீண்ட தெளிவு பிறந்தது. செருக்கும் தீமையும் எவரையும் அழித்து விடும் என்று தெளிந்துகொண்டபின் யாண்டும் இவன் பணிவுடைய ய்ை அடங்கி யிருந்தான். தங்தை முருகப்பெருமானேடு போர்புரிய மூண்டபோது தடுத்து அவனுக்கு உறுதி கலன்களே உரிமையுடன் உரைத்தான். இவனுடைய