பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. செங்கோன் ைம 288 I குடி என்றது பொது மக்களே. ஒரு அரசனுடைய ஆட்சிக்குட்பட்ட நாட்டுள் பல ஊரகளிலும் பரவி வாழ்ந்து வருகிற மாந்தர் குடிகள் என நேர்ந்தனர். சிறிய கூரை வீடுகள் குடில்கள் எனப்படும். கோ மக்கள் ஆள்பவர்: குடிமக்கள் ஆளப்படுபவர். தழீஇ=தழுவி ஆதரவாய் அனைத்து. சொல்லிசை அளபெடைகள் ஈரிடமும் தோய்ந்து கின்றன. பாவின் ஒசை பழமை படிந்து வருகிறது. கோல் = செங்கோல்; நீதிமுறை. ஒச்சும் =செலுத்துகிற; நடத்துகிற மாகிலம் = பெரிய நில மண்டலம். குறுகில மன்னர்கள் பலரை அடக்கி ஆளுகிற சக்கர வர்த்தி மாநில மன்னன் என நின்ருன். சிறந்த தலைமை யான நிலைமையில் உயர்ந்துள்ள வேந்தன் மாந்தரை ஆதரவோடு கலங்து நலமாய் ஆட்சி புரிந்து வரின் பாண்டும் அது பலமாய் மாட்சி மிகுந்து வரும். குடிகளே அன் போடு தழுவிக் கோமுறை பண்போடு செய்துவரின் அங்த முடியரசு குடியரசினும் சிறந்து எல்லாருடைய உள்ளங்களிலும் உவகை பொங்கிவர ஒளிமிகுந்து திகழும்; திகழவே உலகம் முழுவதும் அவ லுடைய குடைநிழலில் தங்கி வாழ விழைந்து விரைந்து வரும் ஆதலால் அம் மன்னன் அடிதழிஇ உலகு கிற்கும் என்ருர், உலக மக்கள் நிலை ஈண்டு உணர வந்தது. அரசன் குடிகளைத் தழுவிவரின் உலகம் அவன் அடிகளே த் தழுவி வரும். இதில் மருவி யுள்ள மானச மருமங்கள் கருதி யுனா வுரியன. அடி = தாள்கள்: பாதங்கள். யாவும் அவன் சரணமடைந்து உவந்து கிற்கும் என உலக நிலையை உணர்த்தி யருளினர். செங்கோல் மன்னன் எல்லா உயிர்களேயும் தன் உயிர் என உன்னி ஒம்புவன்; ஆகவே உயிரினங்களெல் லாம் அவனே உயிர் எனக் கருதி யுருகி உவங்து வரும் என்பதை இங்கே ஒர்ந்து உணர்ந்து கொள்கின்ருேம். 361