பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2806 திருக்குறட் குமரேச வெண்பா 530 கண்டிருந்தும் வீடணன் சேர் காரணத்தை ஏன் எண்ணிக் கொண்டான் இராமன் குமரேசா-அண்டி உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானே வேந்தன் இழைத்திருந் தெண்ணிக் கொளல். (ά)) இ-ள். குமரேசா வீடணன் பிரிந்துவந்த காரணத்தை ஆராய்ந்து இராமன் ஏன் அவனேத் தழுவிக்கொண் டான்? எனின், உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானே இழைத்து இருந்து வேந்தன் எண்ணிக் கொளல் என்க. பக்கத்தே இருந்து நீங்கி ஏது படிந்து வந்தவனே அரசன் கூர்ந்து ஆராய்ந்து ஒர்ந்து உணர்ந்து தழுவிக் கொள்ள வேண்டும். பிரிதலும் வருதலும் வினையாளன் செயல்கள்: எண்ணலும் கொள்ளலும் மன்னவன் வினேகள். உழை=பக்கம், இடம். காரணம் = காரியக் குறிப்பு. இழைத்து = கூர்ந்து ஆராயங்து. இழைத்தல் = அழுத்தமாச் செய்தல்; ஆய்ந்து அறி தல். நூலுக்கு இழை என்று பெயர். நுண்ணிதாய்ச் செய்யப்பட்டது என்பது குறிப்பு. கருமம் சிதையா மல் கருதி யுணர்வதை இங்கே உறுதியாக் கருதவந்தது. இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர். (குறள் 417) இழைத்துக்கொள ற் பாலர் புலமை மிக்கோர். (சிந்தாமணி 4). இவற்றுள் இழைத்தல் உணர்த்தி கிற்றல் அறிக. பிழைப்பு நேராதபடி பாதுகாத்தருள இழைப்பு ஈண்டு இனமாய் இயைந்தது. உழைத்து ஒதுவதும் இழைத்து உணர்வதும் எண்ணித் தேர்வதும் அறி. வுக்குத் தெளிவை அருளுகின்றன. தன் உழை இருந்தோ, பிறர் உழை இருந்தோ பிரிந்து வந்தவனே விரைந்து சேர்த்துக்கொள்ளக்கூடாது.