பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. செங்கோன்மை 2887. தலைசிறந்திருந்தது. எல்லாரும் எல்லாச் செல்வங்களும் எய்தி எங்கும் இன்பமாய் இனிது வாழ்ந்து வந்தனர். போரின் வாழ்நரும், புலத்தின் வாழ்நரும், தாரின் வாழ்நரும், தவாஅப் பண்டத்துப் பயத்தின் வாழ்நரும், படியிற் றிரியா ஒத்தின் வாழ்நரும், ஒழுக்கின் வாழ்நரும், 5. யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும், உயர்ந்தோர் தலையா இழிந்தோர் ஈரு யாவர்க் காயினும் தீதொன்று இன்றி மறனி னெருங்கி நெறிமையின் ஒரீஇக் கூற்றுயிர் கோடலும் ஆற்ரு தாகி 10 உட்குறு செங்கோல் ஊறின்று நடப்ப - யாறும் தொட்ட வும் ஊறுவன ஒழுகக் காடும் புறவும் கவின்றுவளம் சிறப்பப் பொய்யா மாரித் தாகி வைகலும் தண்டா இன்பம் தலேத்தலே சிறப்ப 15 கள வும் அரம்பும் கனவினும் இன்றி விளே-தல் ஒவர் வியன் பெருநாட்டு.” (பெருங்கதை: 4 - 2) அந்த நாட்டு மக்களின் இனிய வாழ்வு கிலேகளே இது காட்டியுளது. காட்சிகளேக் கருதிக் கண்டுகொள்க. செங்கோல் ஊறின்று கடப்ப, இன்பம் தலைத்தலை சிறப்பு என்ற தல்ை அவ்வேங் தனது நீதிமுறையான ஆட்சியே இவ்வாறு நாடு வளங்கள் சுரங்துவர மாந்தர் யாண்டும் மகிழ்ந்து வாழ்ந்துவரக் காரணமாய் கின்றது என்பதை ஒர்ந்து உணர்ந்து உவந்து கொள்கின்ருேம். மலர்தலை உலகம் மன்னனே உயிராக உடையது ஆதலால் அவன் நல்ல நீர்மையுடையய்ைச் சீர்மை யோடு ஆண்டுவரின் அந்த நாடு அல்லல் யாதுமின்றி எல்லா வகையிலும் இனிமையாய்ச் சிறந்து திகழும். கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா; வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா; அரவும் சூரும் இரை தேர் முதலேயும் உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா;