பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்87



பொருட்டால் அரசியல் 87 44. குற்றங்கடிதல் (குற்றங்கள் யாவை என்பதும் வாராமல் காத்தலும்) 1. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. 431 செருக்கும் (மதமும்), கோபமும், காமமும், ஆகிய குற்றங்கள் இல்லாதவருடைய செல்வம் மேம்பாடான தன்மையினை உடையதாகும். . இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா உவகையும் எதம் இறைக்கு. 432 கொடுக்க வேண்டியவற்றிற்குப் பொருள் கொடாதிருத்தலும், நன்மையில் நீங்கிய மானமும், அளவுகடந்த உவகையும் அரசனுக்குக் குற்றங்களாகும். தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். 433 பழிக்கு நாணமுற்று அஞ்சுபவர்கள் தினையளவு சிறிதான குற்றமானது தங்களிடத்தில் உண்டானாலும் அதனைப் பனையளவு பெரிதாகக் கருதுவார்கள். . குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தருஉம் பகை. 434 முடிவினைத் தருவதாகிய பகை குற்றமேயாகும். ஆதலால் அக்குற்றம் தனக்கு வாராதிருப்பதனையே பயனாகக் கொண்டு காத்தல் வேண்டும். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும். 435 குற்றம் வருவதற்கு முன்பாகவே தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை அக்குற்றம் வந்தால் நெருப்பின் முன்னே இருக்கும் வைக்கோலினைப் போல அழிந்துவிடும்.