பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

88



திருக்குறளார் தெளிவுரை 88 8. 7. 10. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு. 436 தன்னுடைய குற்றத்தினை முன்னதாகலே கண்டுகோண்டு அதனை நீக்கிப் பின்னர், பிறர் குற்றத்தினைக் காணவல்லவராக இருந்தால் தலைவனுக்கு நேரக்கூடிய குற்றம் யாது? செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். 437 செல்வத்தினால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியல்:ற்றைச் செய்து கொள்ளாமல் உலோபியாக அதனி.ம் மிகுந்த பற்று வைத்திருப்பவனுடைய செல்வம், பின்னர் இல்லாததாகிக் கெட்டுவிடும். பற்றுள்ளம் என்னும் இவறள்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. 438 செய்யவேண்டிய ஈகைச் செயல்களைச் செய்யாமல் கருமித்தனத்தால் பற்றுதலை வைத்திருக்கும் அத்தன்மை, குற்றமான தன்மைகளுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுவதொன்று அன்று. அது மிகுந்த குற்றமாகும். . லியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி டயவா வினை. 439 செருக்கினால் எப்போதும் தன்னைத்தாலே மதித்துக் கொள்ளாதிருப்பாயாக தனக்கு நன்மையினை .ண்டாக்காத தொழில்களை மனத்தால் விரும்பாதிருப்பாயாக. காதல காதல் அறியாமை டய்க்கிற்பின் எதில ஏதிலார் நூல். 440 தான் விரும்பிய (காதலித்த) பொருள்கள் யாலையென்று தமது விருப்பத்தினைப் பகைவர் அறிந்து கொள்ளாதபடி அனுபவிக்க வல்லவனானால், அப்பகைவர் தன்னை வஞ்சிக்க என்னும் எண்ணம் பழுதாகிவிடும்.