பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்89



பொருட்பால் அரசியல் 89 45. பெரியாரைத் துணைக் கோடல் (எல்லாவகைகளிலும் பெரியார்களானவர்களைத் துணையாக வைத்துக் கொள்ளுதல்) 1. அறன்.அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல், 441 அறத்தினது சிறப்பினையறிந்து தன்னைவிட மூத்த அறிவுடைய பெரியார்களது நட்பின் அருமையினையறிந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். 2. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல், 442 தனக்குவரும் துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்கி, பிறகு அவ்வாறான துன்பங்கள் தனக்கு வாராதபடி முன் அறிந்து காக்கவல்ல தன்மையுடையவர்களை அவர்கள் மகிழ்வதைச் செய்து துணையாகக் கொள்ளுதல் வேண்டும். 3. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். 443 ஆற்றல் மிகுந்த பெரியார்களை அவர் மகிழ்வன செய்து தமக்குச் சிறந்த துணையாகக் கொள்ளுதல், அரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் அரிதானதாகும். 4. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. 444 அறிவு முதலியவற்றினால் தம்மைவிட மிகுந்தவர்களைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டு நடந்து கொள்ளுதல் எல்லா வலிமைகளைக் காட்டிலும் தலைமையானதாகும். 5. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல், 445 அரசனது பாரம் தன்னைச் சூழ்ந்துள்ள பெரியார்களைக் கண்ணாகக் கொண்டு நடத்தலால், அவன் அவ்வாறு சூழ்ந்துள்ளவர்களை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.