பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்91



பொருட்பால் அரசியல் 91 46. சிற்றினம் சேராமை (தீமையான இழிந்த குணமும் செயலும் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ளாதிருத்தல்) 1. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். 45i பெரியோர் இயல்பு கீழான இனத்தைக் கண்டால் அஞ்சி நிற்பதாகும். சிறியோர் இயல்பு அந்த இனத்தைத் தனக்குச் சுற்றமாக எண்ணும். 2. நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பு.அது ஆகும் அறிவு. 452 நீரானது, தான் சேர்ந்த நிலத்தினாலே மாறுபட்டு அந்த நிலத்தின் தன்மையதாகிவிடும். அதுபோல, மனிதர்க்கு அறிவானது தாம் சேர்ந்த இனத்தினாலே வேறுபட்டு அந்த இனத்தின் தன்மையதாகிவிடும். 3. மனத்தான்.ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்.ஆம் இன்னான் எனப்படும் சொல். 453 மாந்தர்க்குப் பொது உணர்வு மனம் காரணமாக உண்டாகும். இவன் இத்தன்மையன் என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல், இனம் காரணமாக உண்டாகிவிடும். 4. மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு. 454 ஒருவனுடைய சிறப்பான உணர்வானது தனது மனத்தில் உள்ளதுபோலப் புலப்படுத்தி உண்மையில் அவன் சேர்ந்த இனத்தினாலே அமைவதாகும். 5. மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். 455 மனம் தூய்மையுடையவனாகும் தன்மையும், செய்யும் தொழில் துய்மையுடையதாகும் தன்மையும் ஆகிய இரண்டும் அவன் சேர்ந்த இனம் தூய்மையாயுள்ள தன்மையினைப் பற்றுக் கோடாகக் கொண்டு வருவனவாகும்.