பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்93



பொருட்பால் அரசியல் 93 47. தெரிந்து செயல்வகை (தலைவனானவன் தானேசெய்ய வேண்டியவற்றை நன்குஆராய்ந்து செய்தலாகும்) 1. அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். 461 தொழில் செய்யும்போது, அப்போது அதனால் வரும் அழிவினையும், பிறகு ஆவதனையும், ஆனபிறகு தரும் ஊதியத்தினையும் சீர்துக்கிப் பார்த்துச் செய்தல் வேண்டும். 2. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். 482 தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத்தகும் தொழிலினை ஆராய்ந்து எண்ணிச் செய்து முடிக்க வல்லவர்களுக்கு அடைவதற்கு அரிய பொருள் யாதொன்றும் இல்லை. 3. ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். 463 பின்பு வரக்கூடிய ஊதியத்தினைக் கருதி முன்பு பெற்றுள்ள முதலையும் இழப்பதற்குக் காரணமான தொழிலினை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள். 4. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். 484 தமக்கு இழிவு எனப்படும் குற்றம் உண்டாவதற்கு அஞ்சுபவர்கள், இனத்துடனும் தனித்தும் ஆராய்ந்து துணியப்படாத தொழிலைத் தொடங்க மாட்டார்கள். 5. வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு. 465 வினைமேல் சென்றால் நிகழும் திறங்களையெல்லாம் முழுவதும் எண்ணாமல் சிலவற்றை எண்ணியவுடனே தொழில்மேல் செல்லுதல். பகைவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்யுமொரு வழி.