பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்95



பொருட்பால் அரசியல் 95 48. வலி அறிதல் (எல்லா வகையான வலிமையினையும் அறிதல்) 1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல், 471 தான் செய்யக் கருதிய தொழிலின் வலிமையினையும், அதனைச் செய்து முடிக்கின்ற தனது வலிமையினையும், பகைவனது வலிமையினையும், இருவர்க்கும் துணையாயி னார் வலிமையினையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். 2. ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல், 472 தம்மால் முடியும் தொழிலையும், அதற்கு அறிய வேண்டிய வலிமையினையும் அறிந்து எப்போதும் அதனையே நினைவாகக் கொண்டு பகைமேல் செல்லும் அரசர்க்கு முடியாத பொருள் இல்லை. - 3. உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். 473 முதன்மையாக $2.50l-ll J தனது வலிமையினை அளந்தறியாமல் மன எழுச்சியால் தம்மைவிட வலியாரோடு போர் செய்தலைத் தொடங்கி முடிக்கப் பெறாமல் இடையே கெட்ட அரசர் பலருண்டு. 4. அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். 474 பிறரொடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாமல், தனது வலிமையினையும் அறியாமல் தன்னையே பெருமையாக வியந்துகொண்டு பகைத்துக் கொண்ட அரசன் விரைவாகக் கெடுவான். 5. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின், 475 மயிலிறகு ஏற்றி வைக்கப்பட்ட வண்டியும் அச்சு முறிவதாகிவிடும்; எப்போது என்றால், அம்மயிலிறகானது மிகவும் அதிகப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டால் என்பதாம்.