பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்97



பொருட்பால் அரசியல் 97 49. காலம் அறிதல் (காலத்தின் அருமையினைக் கூறுதல்) 1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481 தன்னைவிட வலிமையுள்ள (கூகையை) கோட்டானைக் காக்கையானது பகற்பொழுதில் வென்றுவிடும். அதுபோலவே, பகைவரை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாததாகும். 2. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. 482 காலத்தோடு பொருந்த தொழில்செய்து நடந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வதானது செல்வத்தினைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டுகின்ற கயிறாகும். 3. அருவினை என்ப உளவோ கருவியால் காலம் அறிந்து செயின். 483 அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே காலமறிந்து செய்வாராயின், செய்வதற்கு அருமையான தொழில்கள் என்று சொல்லப்படுவனவும் உண்டோ? 4. ஞாலம் கருதினும் கைகூடும் காலம் - கருதி இடத்தான் செயின். #84. காலத்தினைக் கருதித் தக்க இடத்தோடு பொருந்த அதற்குச் செய்யவேண்டிய செயல்களைச் செய்வாராயின், உலகு முழுவதையும் ஒருவன் ஆள நினைத்தாலும் அது முடியும். 5. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். 485 தவறாமல் பூமி முழுவதையும் கொள்ளக் கருதும் அரசர், தமக்கு வலிமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற காலத்தினையே சிந்தித்து அது வருமளவும் காத்திருப்பர்.