பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்99



பொருட்பால் அரசியல் 99 50. இடனறிதல் (இடனறிந்து தொழிலினைச் செய்தல் வேண்டும்) 1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. 491 பகைவரை முற்றுகை இடுவதற்கு ஏற்ற இடம் பெற்றபின் அல்லாமல் அவர் மீது யாதொரு தொழிலினையும் தொடங்காதிருத்தல் வேண்டும். அப்பகைவரைச் சிறியர் என்று இகழாதிருத்தல் வேண்டும். 2. முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும். 492 மாறுபாட்டுடன் கூடிய மனத்தினையுடைய வலிமை நிறைந்த அரசர்க்கும் அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பற்பல பயன்களைக் கொடுப்பதாகும். 3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். 493 வலிமை இல்லாதவர்களும் வலிமையுடையவராகி வெல்லுவார்கள். எப்போது என்றால், அதற்குத் தகுந்த இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடம் வினைகளைச் செய்வார்களானால் என்பதாம். 4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து துன்னியார் துன்னிச் செயின். 494 தாம் தொழில் செய்வதற்கேற்ற இடத்தினையறிந்து சென்ற அரசர் அரணைப் பொருந்தி (கோட்டையினை) நின்று அதனைச் செய்வாராயின், வெல்லக் கருதிய பகைவர் தம் எண்ணத்தினை இழப்பார்கள். 5. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. 495 நீரில் வாழும் முதலை, ஆழமுடைய நீரில் பிறவற்றையெல்லாம் வென்றுவிடும். அந்த நீரைவிட்டு நீங்கிவிட்டால் அம்முதலையை மற்றவை வென்றுவிடும்.