பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்101



பொருட்பால் அரசியல் 101 51. தெரிந்து தெளிதல் (அமைச்சர் முதலியவர்களைத் தேர்ந்தெடுக்கும் 2 முறைகள்) . அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும். 50t அரசன் தெளியப்பட வேண்டிய ஒருவன் அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் ஆகிய நான்கு வகைகளினால் மனத்தின் தன்மையினைத் தெளிந்து தேர்ந்து அறிந்து கொள்ளப்படுவான். குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு. 50.2 உயர்ந்த குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாமல் நமக்குக் கெடுதி வருமோ என்று அஞ்சி நாணுகின்றவனைத் தேர்ந்து அமைத்துக் கொள்ளுவதே தலைவனுக்குத் தெளிவாகும். . அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. 503 சிறந்த அருமையான நூல்களைக் கற்றறிந்து குற்றங்கள் எதுவும் இல்லாதவரிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அறியாமை என்பது இல்லாதிருப்பது அருமையே ஆகும். குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல், 504 ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து அந்த இரண்டு வகைகளிலும் மிக்கவற்றை ஆராய்ந்து, அந்த மிக்கவற்றைக் கொண்டு அவனை அறிந்து கொள்ளல் வேண்டும். - பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். 505 ஒருவனுடைய பெருமைக்கும் மற்றைய சிறுமைக்கும் உரைகல்லாக இருப்பது அவனவன் செய்கின்ற செயல்களேயாகும்.