பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்103



பொருட்பால் அரசியல் 103 52. தெரிந்து வினையாடல் (தெளியப்பட்டவர்களை ஆளுகின்ற திறம்) 1. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். 511 தலைவன் தொழிலினைத் தன்னிடத்தில் வைத்தால், ஆவனவும் ஆகாதனவுமாகிய தொழில்களை ஆராய்ந்தறிந்து அவற்றுள் ஆவனவற்றையே விரும்பும் இயல்புடையான், அரசனால் சிறந்த தொழில்களில் ஆளப்படுவான். 2. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. 512 பொருள் வருகின்ற வழிகளை விரியச் செய்து செல்வங்களை வளர்த்து அவற்றிற்கு உண்டான இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவன். மன்னனுக்குத் தொழில் செய்தல் வேண்டும். 3. அன்பு:அறிவு தேற்றம் அவா.இன்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. 513 அன்பும் அறிவும் கலங்காத தெளிவும் ஆசையில்லாமையும் ஆகிய இந்த நான்கும் நல்லபடியாக உடையவனிடத்தில் தொழிலினை விட்டிருப்பதே தெளிவாகும். 4. ளனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால் வேறாகும் மாந்தர் பலர். 514 எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்து தொழிலில் வைத்த பின்னும், அத்தொழிலின் தன்மையால் வேறுபடும் மாந்தர் உலகத்தில் பலருண்டு. ம 5. அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று. - --- 515 தொழிலினைத் தக்கபடி ஆராய்ந்தறிந்து முடிவு செய்ய வல்லவனையல்லாமல், இனி நம்மிடத்தில் அன்பு உள்ளவன் என்ற காரணத்தினால் தொழிலின்மேல் ஒருவனை அமர்த்தும் தன்மை கூடாது.