பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்105



பொருட்பால் அரசியல் 105 53. சுற்றம் தழால் (தம் சுற்றமாயினோரை நீங்கவிடாமல் அனைத்துக் காத்தல்) 1. பற்றற்ற கண்ணும் பழைமையா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. 521 ஒருவன் செல்வமிழந்து வறியவனான காலத்திலும் அவனுடைய பழைமையை எடுத்துக் கொண்டாடுகின்ற இயல்புகள் சுற்றத்தாரிடம் இருப்பனவாகும். 2. விருப்பு:அறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும். 522 அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு உண்டாகி விடுமானால், அது அவருக்குக் கிளைத்தல் நீங்காத பல செயல்களையும் தரும். - 3. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. 523 சுற்றத்தாருடன் நெஞ்சு கலந்து பழகுதல் இல்லாதவனுடைய வாழ்க்கையானது குளத்தின் பரப்பானது இருக்க வேண்டிய கரையில்லாமல் நீர் நிறைந்தது போலாகும். 4. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். 524 செல்வம் பெற்ற ஒருவன் அதனால் அடையும் பயன் என்னவென்றால் சுற்றத்தார்களால் தான் சூழப்படும் வகையில் தழுவி நடந்து கொள்ளுதலாகும். 5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். 525 ஒருவன் தம் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்தலையும், இன்சொல் சொல்லுவதையும் செய்வானானால், தொடர்ந்து பலவகையான சுற்றத்தால் சூழப்படுவான்.