பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

106



திருக்குறளார் தெளிவுரை I08 6. 10. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அஃதுஒப்பது இல், 536 மறவாமைக்குணம் யாவரிடத்திலும் எக்காலத்திலும் இடையீடின்றி உண்டாகி விடுமானால், அதனையொத்த நன்மை வேறு எதுவும் இல்லை. அளியளன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியான் போற்றிச் செயின். 537 மறதி இல்லாத மனத்தாலே எண்ணிச் செய்யப்பட்டால் இவை செய்வதற்கு அருமையானவை' என்று சொல்லப்படும் முடியாத செயல்கள் எதுவுமே இல்லை. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல், 538 நீதி நூலுடையார் இவை மன்னர்க்கு உரியன என்று கூறியவற்றைக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவர்களுக்கு எழுமையிலும் நன்மை இல்லை. . இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் அமைந்துறும் போழ்து. 539 மன்னர்கள் தமது செருக்கில் களிப்புற்றிருக்கும்போது, முற்காலத்தில் அப்படிப்பட்ட குணத்தினால் உண்டான மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும். உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின். - 540 தான் அடைய நினைத்த பொருள்கள் அனைத்தையும் ஒருவன் அடைதல் எளிதாக முடியும். எப்போது என்றால், பின்னும் தான் அதனையே நினைத்திருப்பானேயானால், என்பதாம்.