பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்109



பொருட்பால் அரசியல் 109 55. செங்கோன்மை (அரசன் ஆட்சியின் சிறப்புத் தன்மை) 1. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. 541 குடிமக்கள் குற்றம் செய்தால் அக்குற்றத்தினை நாடி அறிந்து பலரிடத்தும் கண்ணோட்டம் இல்லாமல் நடுவு நிலைமையாக அமைந்து, குற்றத்திற்குச் சொல்லப்பட்ட தண்டனையை ஆராய்ந்து செய்வதே முறையாகும். 2. வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி, 542 உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழும். குடிமக்கள் அரசனுடைய செங்கோலினை நோக்கி வாழ்வார்கள். 3. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். 543 அந்தணர்களுடைய மறையாகிய நூலுக்கும் அறத்திற்கும் முதற் காரணமாக நிலைபெற்றது எதுவென்றால், அரசனால் செலுத்தப்படும், செங்கோலாகும். 4. குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. - 544 தம் குடிமக்களை அனைத்துச் செங்கோல் செலுத்தும் பெருநில மன்னனது அடியைப் பொருந்தி உலகத்தோர் விடாது நிற்பர். 5. இயல்புளிக் கோல்ஒச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. 545 நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலினைச் செலுத்தும் மன்னனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளைச்சலும் ஒருங்கே சேர்ந்து இருப்பனவாகும்.