பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

110



திருக்குறளார் தெளிவுரை IIO 6 10. . வேல்அன்று வென்றி தருவது மன்னவன் கோல்அது உம் கோடாது எனின். 546 மன்னனுக்குப் போரில் வெற்றியினைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அல்ல; செங்கோலேயாகும், அக்கோலும் கோணாது இருக்குமானால் என்பதாம். இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின், 547 வையகத்தையெல்லாம் அரசன் காப்பாற்றுவான்; அந்த அரசனை அவனுடைய செங்கோல் காப்பாற்றும்; அதனை அவன் முட்டாமல் செலுத்துவானானால் என்பதாம். எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். 548 எல்லோரும் எளிமையாகக் காண முடிகின்றவனாகி, ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த பாவமும் பழியும் அடைந்து கெடுவான். குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று வேந்தன் தொழில். 549 குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் பேணிக் காத்துக் குற்றம் செய்தால் தண்டனையளிப்பது வேந்தனுக்குப் பழியாகாது, அவனுடைய தொழிலேயாகும். கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர். 550 வேந்தனானவன் கொடியவர்களைக் கொலையினால் தண்டித்துத் தக்கோரைக் காப்பாற்றுதல், உழவன் களையைக் களைந்து பசுமையான புயிரைக் காப்பாற்றுவதோடு ஒக்கும்.