பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்111



பொருட்பால் அரசியல் 111 56. கொடுங்கோன்மை (அரசன் முறை செய்தலில் கோனாதிருத்தல்) 1. கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற் கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து 551 பொருளைக் கருதி நீதியற்ற முறையில் குடிமக்களிடம் அல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன், கொலை செய்யும் தொழிலை மேற்கொண்டவர்களைவிடவும் கொடியவனாவான். 2. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. 552 தண்டிக்கும் தொழிலோடு நின்ற அரசன் குடிமக்களிடம் பொருள் வேண்டிக் கேட்டல், வேற்படைகளுடனே தனியே நின்ற கள்வன் வழிப்போக்கனை நோக்கிக் கைப்பொருளினைத் 'தா' என்பதனோடு ஒக்கும். 3. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும். 553 தனது நாட்டில் நிகழ்பவற்றை நாள்தோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறைகளைச் செய்யாத மன்னன் நாள்தோறும் நாட்டினை இழப்பான். 4. கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. 554 பின்னர் விளைவதனையறியாமல் முறைதப்பச் செய்யும் அரசன், அச்செயலால் முன்பு ஈட்டிய பொருளையும் பின்பு ஈட்டுவதற்கு ஏதுவாகிய குடிமக்களையும் இழப்பான். 5. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. 555 குடிமக்கள் அரசனால் துன்பப்பட்டு அதனைப் பொறுக்க முடியாமல் அழுத கண்ணிரல்லவா, அவனுடைய செல்வத்தினைக் குறைக்கும் கருவியாகும்.