பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

112



திருக்குறளார் தெளிவுரை 112 6, 10. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. 556 மன்னர்கள் புகழுடன் நிலை பெற்றிருத்தல் என்பது செங்கோன்மையினாலேயாகும். அச்செங்கோன்மை இல்லாவிட்டால் அப்புகழ் உளவாகாது. துளிஇன்மை ஞாலத்திற்கு ஏற்றுஅற்றே வேந்தன் அளிஇன்மை வாழும் உயிர்க்கு. 557 மழை இல்லாமையானது உலகில் வாழும் உயிர்களுக்கு எவ்வகைத் துன்பத்தினை உண்டாக்குமோ, அவ்வகைத் துன்பம் அருளில்லாத வேந்தன் நாட்டில் வாழும் மக்களுக்கு உண்டாகும். . இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின், 558 செங்கோல் முறையினைச் செய்யாத, மன்னவனது கொடுங்கோலின் கீழ் வாழ்ந்தால் யாவர்க்கும் பொருள் வைத்திருப்பதானது பொருள் இல்லாமையினைக் காட்டிலும் அதிகமான துன்பத்தினைச் செய்வதாகும். முறைகோடி மன்னவன் செய்யின் ചഐകേr. ஒல்லாது வானம் பெயல், 559 மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்வானானால் அவன் நாட்டில் பருவ மழை இல்லாமற்போகும்படி மேகம் மழை பொழிதலைச் செய்யாது. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்பறப்பர் காவலன் காவான் எனின். . 580 காத்தற்குரிய 凸5T@J众}GTsä அரசன் உயிர்களைக் காப்பாற்றானாகில் அறம் இல்லாத அவன் நாட்டுப் பசுக்கள் பால் தருவது குறைந்து விடும். ஆறு வகைப்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் நூல் கற்பதை மறந்து விடுவார்கள். தொழில்கள் நசிந்து விடும்.