பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்113



பொருட்பால் அரசியல் 113 57. வெருவந்த செய்யாமை (குடிமக்கள் அஞ்சி நடுங்கக் கூடியவற்றைச் செய்யாதிருத்தல்) 1. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561 தக்க முறையில் நடுவாக நின்று ஆராய்ந்து குற்றம் செய்தவன் பின்னும் அதனைச் செய்யாமல் இருக்கும் பொருட்டு அக்குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பவனே வேந்தனாவான். 2. கடிதுஒச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர். 562 செல்வம் தன்னைவிட்டு நெடுங்காலம் நீங்காமல் நிற்பதை வேண்டுபவர்கள் தண்டிக்கும்போது அளவு கடந்து செய்வது போலத் தொடங்கி, செய்யும்போது அளவுகடவாமல் செய்தல் வேண்டும். 3. வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563 குடிகள் மிகவும் அஞ்சுகின்ற செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாகிவிடில், அவ்வரசன் உறுதியாகக் கடிதில் கெடுவான். 4. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். 564 குடி மக்களால் தங்கள் தலைவன் கொடுமையானவன்' என்று சொல்லப்படும் துன்பமான சொல்லினையுடைய வேந்தன் ஆயுளும் குறைந்து செல்வமும் விரைவில் இழப்பான். 5. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண்டு அன்னது உடைத்து. 565 தன்னைக் 战s总峦 வருவோர்க்கு எளிதில் காணமுடியாதவனாயும், கண்டால் கடிய முகத்தையுடையவனாகவும் இருக்கின்ற மன்னனுடய செல்வம் பேயால் காணப்பட்டதொரு குற்றத்தினை உடையதாகும்.