பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

114



திருக்குறளார் தெளிவுரை 114 6, 10. கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடுஇன்றி ஆங்கே கெடும். 566 அரசன் Gilt-ud சொல்லினையுடையவனாகவும், கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதவனாகவும் இருந்தால், அவனுடைய பெரிய செல்வம் நீடுதலில்லாமல் அப்பொழுதே கெடும். . கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். 567 கடுமையான சொல்லும் குற்றத்திற்கு மேம்பட்ட தண்டனையும் ஆன இரண்டும் அரசனது வெல்லுதற்கேற்ற மாறுபாடு என்னும் இரும்பினைத் தேய்க்கின்ற அரமாகும். இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு. 588 தன் அமைச்சர்களோடு தானும் சிந்தனை செய்து செயல்படாத வேந்தன், அக்குற்றத்தினால் தமது செயல் பழுதுபட்டபோது பிறர்மேல் கோபம் கொள்ளுவானாகில், அவனுடைய செல்வம் நாள்தோறும் சுருங்கும். செருவந்த போழ்தின் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும், 569 பகைவர் வருவதற்கு முன்பாகவே தனக்குப் புகலிடமானதோர் அரண் செய்து கொள்ளாத அரசன் போர்வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாததால் விரைவில் கெடுவான். கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லது இல்லை நிலக்குப் பொண்ற. 570 கடுங்கோலனாகிய அரசன் நீதி நூல் முதலியனவற்றைக் கல்லாதாரைத் தனக்கு அங்கங்களாக வைத்துக் கொள்ளுவான். அக்கூட்டத்தினரை விடப் பூமிக்கு அதிகமான பாரம் வேறு இல்லை.