பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்115



பொருட்பால் அரசியல் 115 58. கண்ணோட்டம் (தம்முடன் பழகியவரைக் கண்டால் அவர் கூறியதை மறுக்க முடியாமை) 1. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டு.இவ் வுலகு. 57.1 கண்ணோட்டம் (பழகியவர் மீது அன்புடைமை) என்னும் சிறப்புடைய அழகு இருந்து வருவதால்தான் இந்த உலகம் இருந்து வருகின்றது. 2. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. 57շ 空_岛0母 நடைமுறையென்பது கண்ணோட்டத்தினால் நிகழ்வதாகும். ஆதலால், கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது இந்நிலத்திற்குப் பாரமாகும். 3. பண்ளன்னாம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்ணன்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். 573 பாடுவதற்குப் பொருத்தமில்லாமற் போனால் பண் என்ன 1-JIL|##T உடையதாகும்? அதுபோலவே கண்ணோட்டமில்லாத கண் என்ன பயனை உடையதாகும்? 4. உளபோல் முகத்துளவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். 574 அளவு மீறாத கண்ணோட்டம் (தாட்சண்யம்) இல்லாத கண்கள், பார்ப்பதற்கு - பார்ப்பவர்களுக்கு - இருப்பதுபோலத் தோன்றுமே அல்லாமல் என்ன பயனைச் செய்யும்? - 5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல் புண்ளன்று உணரப் படும். 575 ஒருவனுடைய கண்ணிற்கு அணியும் ஆபரணம் கண்ணோட்டமேயாகும். அந்த ஆபரணம் இல்லையானால், அஃது அறிவுடையோரால் புண் என்று உணரப்படும்.