பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

116



மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் கண்ணொடு இயைந்துகண் னோடா தவர். 576 கண்ணோட்டம் இருக்க வேண்டிய கண்களோடு பொருந்தி, அதற்குரிய கண்ணோட்டம் இல்லாதவர்கள் மண்ணோடு பொருந்தி இருக்கின்ற மரத்தினை ஒப்பர். . கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். 577 கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுடையரும் அல்லர்; கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதிருப்பதும் இல்லை. . கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்துஇவ் வுலகு. 578 முறை செய்தலாகிய தனது தொழில் கெடாமல் கண்ணோட்டம் செலுத்த வல்லவனுக்கு இவ்வுலகம் உரியதாகிய தன்மையுடையது. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் னோடிப் பொறுத்துஆற்றும் பண்பே தலை. 579 தமக்குத் துன்பம் கொடுக்கும் தன்மையுடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராகிக் குற்றத்தினைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு தலையான பண்பாகும். பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். 58C) பழகியவர்கள் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் மறுக்க முடியாமல் அதனையும் உண்டு பின்பும் அவருடன் பொருந்தி இருப்பர்; யாரென்றால், யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை விரும்புகிறவர்கள் என்பதாம்.