பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

118



திருக்குறளார் தெளிவுரை 118 6. 10, துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. 586 முற்றும் துறந்தவராயும், விரத ஒழுக்கினராயும் தோற்றமளித்து அரிய இடங்களில் எல்லாம் புகுந்து ஆய்ந்து, சந்தேகப்பட்டுப் பிடித்து ளத்துன்பம் செய்தாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான். மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587 அறியப்பட வேண்டியவர்கள், மறைவாகச் செய்த செயல்களை அவர்களுக்கு உள்ளாயினரால் கேட்கவல்லவனாகி, கேட்டறிந்த செயல்களிலே பிறகு சந்தேகம் இல்லாதபடி துணிய வல்லவனே ஒற்றனாவான். ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஒர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588 ஓர் ஒற்றன் தெரிந்து வந்து அறிவித்த காரியத்தையும் மற்றொரு ஒற்றன் கொண்டுவந்த செய்தியுடன் ஒப்புமை கண்டு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும். 589 ஒற்றர்களை ஆளும்பொழுது ஒருவரை ஒருவர் அறியாதபடி ஆளுதல் வேண்டும். அவ்வாறுள்ள ஒற்றர்கள், மூவரை வேறு வேறாக ஒரு பொருளினை அறியச் செலுத்தி, அம்மூவர் தருவதும் ஒத்திருந்தால் அது மெய் என்று தெரியப்படும். சிறப்பு:அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. 590 மறைவாகச் செய்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பினைப் பிறர் அறியுமாறு செய்யாதிருக்க வேண்டும். அப்படிச் செய்வானானால், மறைத்து வைக்கப்பட வேண்டியதைத் தானே வெளிப்படுத்தி விட்டான் என்பதாகும்.