பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்119



பொருட்பால் அரசியல் 119 60. ஊக்கம் உடைமை (மனம் தளர்ச்சியின்றி எழுச்சியுடன் செயல்புரிதல்) 1. 5. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார் உடையது உடையரோ மற்று. 591 ஒருவரை உடையவர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கமே யாகும். அந்த ஊக்கம் இல்லாதார் வேறு யாது உடையவராயினும் உடையவர் ஆவரோ? ஆகார் என்பதாம். உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். 592 ஊக்கம் உடையவராக இருப்பதே ஒருவர்க்கு நிலையான உடைமையாகும். மற்றபடி பொருள் உடைமை யென்பது நிலையாக நில்லாமல் நீங்கிவிடும். ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்து.ை யார். 593 நிலைபெற்ற ஊக்கத்தினைக் கைப்பொருளாகக் கொண்டவர்கள் இழந்தாராயினும், கைட்பொருளை இழந்தோம் என்று மனம் வருந்த மாட்டார்கள். . ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் ஊடையான் உழை. 594 அசைவில்லாத ஊக்கத்தினை உடையவன் இருக்கும் இடத்திற்குப் பொருள் தானே வழிதேடிக்கொண்டு போகும். வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு. - 595 நீர்ப் பூக்களின் தாளினது நீளமானது நின்ற நீரினது அளவினதாக இருக்கும். அதுபோல மக்களுடைய ஊக்கத்தின் அளவினதேயாகும். அவர்களுடைய உயர்ச்சி.