பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

120



திருக்குறளார் தெளிவுரை - I2O 6. உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்று.அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. 596 தாங்கள் கருதுவதெல்லாம் தங்களின் உயர்ச்சியினையே கருதுதல் வேண்டும். அவ்வுயர்ச்சி கூடிவரவில்லையென்றா லும், அக்கருத்து, தள்ளாத தன்மையினை உடையதாகும். 7. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. 597 யானையானது புதையாகிய அம்பினால் புண்பட்ட போதும், தளராமல் நின்று தனது பெருமையினை நிலைநிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர்கள். தாம் கருதிய உயர்ச்சிக் குச் சிதைவு வந்த போதும் மனம் தளரமாட்டார்கள். தமது பெருமையினை நிலை நிறுத்துவார்கள். 8. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. 598 ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தாருள் ‘யாம் வண்மையு டையேம் என்று தம்மைத் தாமே மதிக்கும் பெருமையினைப் பெறமாட்டார்கள். - 9. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். 599 எல்லா விலங்கினங்களிலும் தானே பெரிய உடம்பினையுடை யது அதுவேயன்றி கூரிய கொம்புகளையும் (தந்தங்களையும்) உடையது. என்றாலும், அப்படிப்பட்ட யானையானது, ஊக்கம் நிறைந்த சிறிய உருவங்கொண்ட புலி தனக்கு எதிர்ப்பட்டால் அதற்கு அஞ்சும். 10. உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார் மரம்மக்கள் ஆதலே வேறு. 500 ஒருவர்க்குத் திண்ணிய அறிவானது ஊக்கம் மிகுந்திருப்பதே யாகும். அந்த ஊக்கம் இல்லாதவர்கள் மக்களாக மாட்டார் கள்; மரங்களாவார். இயற்கையாக உள்ள மரங்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், மக்கள் தோற்றமேயாகும். -