பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்121



பொருட்பால் அர்சியல் 121 61. மடியின்மை (சோம்பல் இல்லாத தன்மை) 1. குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசுஊர மாய்ந்து கெடும். - 601 தான் பிறந்த குடியென்னும் அணையா விளக்கு ஒருவனுடைய சோம்பல் என்னும் மடியாகிய இருள் அடர மழுங்கிக் கெடுவதாகும். 2. மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். 602 தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாகச் செய்ய வேண்டுவோர் சோம்பலினைச் சோம்பலாகவே நினைத்து முயற்சியுடன் ஒழுகுதல் வேண்டும். 3. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து. 603 விடவேண்டிய சோம்பலினைத் தன்னுள்ளே வைத்து நடக்கின்ற அறிவில்லாதவன் பிறந்துள்ள குடியானது, அவனுடைய காலம் முடிவதற்குள் அழிந்துவிடும். 4. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றுஇ லவர்க்கு. 604 சோம்பலிலேயே வீழ்ந்தமிழ்ந்து சிறந்த முயற்சி இல்லாதவர்களுக்குத் தனது குடியும் அழிந்து குற்றமும் பெருகிவிடும். . 5. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன், 605 சோம்பலும், விரைந்து செய்ய வேண்டியதை நீட்டித்துச் செய்யும் இயல்பும், மறதியும், தூக்கமும் ஆகிய இந்நான்கும் கெட்டுப் போகும் தன்மையுடையவர்கள் விரும்பி ஏறும் மரக் கலங்களாகும்.