பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்125



பொருட்டால் அரசியல் 125 63. இடுக்கண் அழியாமை (தனக்குத் துன்பம் வந்தபோது கலங்காமை) 1. இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்துர்வது அஃதொப்பது இல். 621 ஒருவன் தனக்கு இடுக்கண் (துன்பம்) வந்தபோது அதற்கு அழியாமல் உள்மகிழ்தல் வேண்டும். அத்துன்பத்தினை மேன்மேலும் நெருக்க வல்லது, அம்மகிழ்ச்சி போன்றது வேறு எதுவும் இல்லை. 2. வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். 622 வெள்ளம் போலக் கரையில்லாத துன்பங்கள் (இடும்பைகள்) எல்லாம், அறிவுடையவன் தனது உள்ளத்தினாலே நினைத்துப் பார்க்க அப்பொழுதே கெடும். 3. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். - 623 தொழில் செய்யும்போது இடையில் வந்த துன்பங்களுக்குத் துன்பப்படாதவர்கள், வந்த அத்துன்பங்களுக்குத் துன்பத்தினை உண்டாக்கி விடுவர். 4. மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624 விலக்கிய இடங்களில் எல்லாம் வண்டியினைப் பெரு முயற்சியுடன் இழுத்துச் செல்லுகின்ற மாட்டினைப் போல, தொழிலினை முயன்று செய்து கொண்டு போகின்றவனைத் துன்புறுத்தும் துன்பம், தானே துன்பப்படும். 5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும். - 625 இடைவிடாமல் துன்பங்கள் மேன்மேல் வந்தாலும், தன் மனத்தில் உள்ள கோட்பாட்டினை விடாதவனிடம் வந்த துன்பங்கள் தாமே துன்பப்படும். -