பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்127



பொருட்டால் அங்க இயல் 127 64. அமைச்சு 1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. - 831 தொழில் செய்யும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், v அதற்கு ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய தொழிலும் ஆகியவற்றை நன்கு எண்ணவல்ல வனே. அமைச்சனாவான். 2. வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632 தொழில் செய்யுங்கால் மனம் தளராமையும், குடிகளைக் காத்தலும், நீதி நூல்களைக் கற்று, நல்லன தீயனவற்றை அறிதலும், முயற்சியும் ஆகிய இந்த ஐந்தும் சிறப்பாக உடையவனே அமைச்சனாவான். 3. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. 633 தக்க காலத்தில் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், வேண்டியவர்களை நன்கு ஆதரித்துப் பிரியாமல் வைத்துக் கொள்ளலும், பிரிந்தவர்களைப் பொருத்த வேண்டின் பொருத்தலும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனா வான். 4. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. 634 செய்தொழிலில் ஆவன ஆராய்ந்து தெரிதலும், செய்யும் போது வாய்க்கும் திறத்தினை நாடிச் செய்தலும், திட்டமிட் டுச் செய்ய வேண்டியவற்றை முடிவாகச் சொல்லலும் ஆகியஇவற்றில் வல்லவனே அமைச்சனாவான், - 5. அறன்.அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான் றும் திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. 835 செய்ய வேண்டிய அறம் இன்னது என்று அறிந்து ஏற்ற கல்வியால் அமைந்த சொல்லினையுடையவனாக, எக்கா லத்திலும் தொழில் செய்யும் திறங்களையுடைய அமைச் சனே மன்னனுக்குச் சிறந்த துணையாவான்.