பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

128



திருக்குறளார் தெளிவுரை 130 6. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். 646 பிறர்க்குத் தாம் சொல்லும்போது, அவர் கேட்பதற்கு விரும்புமாறு சொல்லி. அவர் தமக்குச் சொல்லும்போது அச்சொல்லின் பயனைக் கொண்டறிதல் குற்றம் அற்றவரது துணிவாகும். 7. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647 தான் எண்ணியவற்றைப் பிறர்க்குச் சொல்லுவதில் வல்லவனாகி, சொல்லுவதில் சோர்வில்லாதவனாகி, அவைக்கு அஞ்சாதவன் எவனோ அவனை மாறுபாட்டினால் வெல்லுதல் யாவர்க்கும் அரிதாகும். 8. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது சொல்லுதல் வல்லார் பெறின். 648 சொல்லப்படுபவற்றை ஒழுங்காகவும் முறையாகவும் இனிதாகவும் சொல்லுகின்ற வல்லவரைப் பெற்றுவிட்டால், உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்ளும். 9. பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற - சிலசொல்லல் தேற்றா தவர். 649 குற்றமில்லாதவையாகச் சில வார்த்தைகளில் சொல்லும் ஆற்றல் அறியாதவர்கள், பற்பல வார்த்தைகளைத் தொகுத்துச் சொல்ல ஆசைப்படுவார்கள். 10, இனர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துரையா தார். - 850 தாம் கற்று வைத்துள்ள நூல்களைப் பிறர் அறியும் வண்ணம் விரித்துரைக்க முடியாதவர்கள், கொத்தாக மலர்ந்திருந்தும் மணமில்லாத மலரினை ஒப்பர்.