பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்129



பொருட்பால் அங்க இயல் 131 66. வினைத்துய்மை (அறமும் பொருளும் தரும் நல்லனவற்றையே செய்தல்) 1. துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். 651 ஒருவனுக்குத் துணையினது நன்மையாவது செல்வம் ஒன்றினை மட்டும் தரும். தொழிலினது நன்மையாவது அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும். 2. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. 652 புகழினையும் அறத்தினையும் பயனாகத் தராத தொழில்களை எக்காலத்திலும் ஒழித்து நீக்குதல் வேண்டும். 3. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னும் அவர். 653 மேலாகக் கடவோம் என்று நினைப்பவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவதாகிய தமது புகழினைக் கெடுக்கின்ற தொழில்களைச் செய்வதை விடுதல் வேண்டும். 4. இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்குஅற்ற காட்சி யவர். 654 அசைவு இல்லாத தெளிவினையுடையவர்கள், தாம் துன்பம் அடைய நேரிட்டாலும் அது நீங்குதற் பொருட்டு இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள். 5. எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று. 855 'யான் செய்தது எப்படிப்பட்டது? என்று பின்னர் தானே இரக்கப்படுகின்ற தொழில்களை ஒருகாலும் செய்யாதிருத்தல் வேண்டும். அப்படி ஒருகால் மயங்கிச் செய்து விடுவானேயானால், மீண்டும் அப்படிப்பட்டவற்றைச் செய்யாதிருத்தல் நல்லதாகும்.