பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

130



so த ருக்குறளார் தெளிவுரை 132 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. 658 தன்னைப் பெற்ற தாயினது வறுமையைக் கண்டு இரக்கப்படுகின்ற போதும், அதனைக் காட்டி அறிவுடையோர் பழிக்கும் தொழில்களை ஒருவன் செய்யாதிருக்க வேண்டும். . பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை, 657 தீமையான தொழில்களைச் செய்து அதனால் பழியினைத் தாம் மேற்கொண்டு பெற்ற செல்வத்தினை விடப் பழியினை மேற்கொள்ளாத சான்றோர்கள் அனுபவிக்கும் மிகுந்த வறுமையே உயர்ந்ததாகும். . கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். 658 நூலோர் தீயவை யென்று நீக்கிய தொழில்களைப் பொருள் கருதி நீக்காமல் செய்த அமைச்சர்க்கு அவை ஒருவகையில் முடிந்தாலும் துன்பத்தினையே தரும். அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. 659 ஒருவன் தீய தொழில்களைச் செய்து பிறர் அழுது இரங்க தான் கொண்டு சென்ற பொருள் எல்லாம், அவனே இரங்கி அழப் போய்விடும். துய வழியில் சேர்த்த பொருள் முன்பு இழக்க நேரிட்டாலும் பின்பு வந்து நற்பயனைக் கொடுக்கும். சலத்தால் பொருள்செய்து.ஏ மார்த்தல் பசுமட் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று. Յ6C} தீய தொழில்களால் பொருள் சேர்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்தல் என்பது, பச்சை மண் பாத்திரத்திற்குள்ளே நீரைப் பெய்து அதனைப் பாதுகாப்பது போலாகும்.