பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்131



பொருட்டால் அங்க இயல் 133 67. வினைத்திட்பம் (தொழில் செய்தற்கு வேண்டிய மனத் திண்மை) 1. வினைத்திட்டம் என்பது ஒருவன் மனத்திட்பம் 5 மற்றைய எல்லாம் பிற. - é$1 தொழில் செய்யும்போது திண்மையென்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியவனுடைய மனத்திண்மையே ஆகும். அதுவல்லாத மற்றவை எல்லாம் திண்மையென்று சொல்லப்பட மாட்டாவாம். ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறுளன்.ர் ஆய்ந்தவர் கோள். 662 நீதி நூல்களை ஆராய்ந்தவர்களுடைய துணிவு என்னவென்றால், பழுதுபடும் தொழில்களைச் செய்யாமையும், செய்தொழிலில் ஒருகால் .ழுது உண்டானால் அதற்கு மனம் தளராமையும் ஆகிய இரண்டின் வழியேயாகும். கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். 683 செய்யப்படும் தொழில்களை முடிந்த பிறகே தெரியுமாறு செய்தல் வேண்டும். இடையில் மறைத்துச் செய்வதே திண்மையாகும். இடையில் தெரிந்து விடுமானால் நீங்காத துன்பத்தினைக் கொடுக்கும். - சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 664 'யான் இத்தொழிலினை இவ்விதத்தில் செய்து முடிப்பேன் என்று சொல்லுதல் பார்க்கும் எளிதானதாகும். அதனை அவ்வாறே செய்தல் யார்க்கும் அரியதாகும். வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும். GĖGĖ எண்ணத்தால் சிறப்படைந்து மாட்சிமைப்பட்ட அமைச்சரது தொழில் வலிமையானது வேந்தனிடத்தில் செல்வத்தினையும் புகழினையும் உண்டாக்குவதால் எல்லோராலும் நன்கு மதிக்கப்படும்.