பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்133



பொருட்பால் அங்க இயல் 135 68. வினை செயல்வகை (தொழிலினைச் செய்யும் திறம்) 1. சூழ்ச்சி முடிவு துணிவுளுய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 67.1 ஆலோசனை செய்வதற்கு எல்லை என்பது யாதென்றால், ஆலோசிப்பவன் இனி இது தவறாது என்று துணிவினைப் பெறுதலாகும். அப்படித் துணிந்தபின் நீட்டிக்கப்படுமானால் அது குற்றமுடையதாகிவிடும். 2. தூங்குக தூங்கிச் செயற்பால துங்கற்க தூங்காது செய்யும் வினை. 672 நீட்டித்துச் செய்யும் பகுதியான தொழில்களை நீட்டித்துச் செய்தல் வேண்டும். நீட்டியாது செய்ய வேண்டிய தொழில்களை நீட்டியாமல் செய்தல் வேண்டும். 3. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல், 673 தொழில் செய்யும்போது முடிந்த இடத்தில் எல்லாம் தண்டத்தினால், அதாவது போரினால் செய்தல் நன்று. அது முடியாதபோது மற்ற வழிமுறைகளினால் செய்தல் நல்லது. 4. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். 674 செய்யத் தொடங்கிய தொழில், ஒழிக்க வேண்டிய பகை ஆகிய இரண்டிலும் எச்சமாக (மீதியாக) வைத்தால், அவை மிச்சமாக விட்டுவிட்ட தீயானது வளர்ந்து விடுவதுபோல வளர்ந்து கெடுக்கும். 5. பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். 675 தொழில் செய்யும்போது பொருளும், கருவியும், காலமும், தொழிலும், இடமும் ஆகிய இந்த ஐந்தினையும் மயக்கம் நீங்க எண்ணிச் செய்தல் வேண்டும்.