பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்135



பொருட்பால் அங்க இயல் 137 2 69. (தூது செல்வேர் தன்மைகள்) . அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு. 88: எல்லோரிடத்திலும் அன்புடையவராக இருத்தலும், உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருத்தலும், வேந்தன் விரும்புகின்ற பண்புடையவராக இருத்தலும் ஆகிய இத்தன்மைகள் துது செல்வோர்க்குரிய இலக்கணமாகும். . அன்பு:அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. 682 மன்னரிடம் நிறைந்த அன்புடைமையும், அறிவுடைமையும், ஆராய்ந்து சொல்லும் வன்மையும் எனத் தூதுரைப்பார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. நூலோருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. 683 வேலினையுடைய வேற்றரசனிடம் சென்று தம் அரசனுக்கு வெற்றியைத் தரும் தொழில் சொல்வானுக்கு இலக்கணமாவது, நீதி நூல்களைக் கற்ற அமைச்சருக்குள் தான் அவற்றில் வல்லவனாதல். அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. 884 இயற்கையான அறிவும். கண்டார் விரும்பும் தோற்றமும், பற்பல வகையில் ஆராய்ந்த கல்வியும் ஆகிய இம்மூன்றும் நிறைந்திருக்கப் பெற்றவனே வேற்றரசரிடம் துது செல்லக் கடவன். தொகச்சொல்லித் துவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. 685 வேற்றரசரிடம் சொல்லும்போது தொகுத்துச் சொல்லியும், வெம்மையான சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனம் மகிழச் சொல்லியும் தன் அரசனுக்கு நன்மை பயப்பவனே தூதனாவான்.