பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்137



பொருட்பால் அங்க இயல் 139 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல் (அமைச்சர் அரசரைப் பொருந்தி நடந்துகொள்ளுதல்) 1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க お இகல்வேந்தர் சேர்ந்தொழுகு வார். 69i விரைவில் கோபித்துக் கொள்ளும் இயல்புடைய மாறுபாடுடைய வேந்தர்களைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரிடமிருந்து மிக நீங்காமலும் மிக நெருங்காமலும், தீக்காய்வார் போல இடையிலே நின்று பழகுதல் வேண்டும். மன்னர் விழைய விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கம் தரும். 692 தம் மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதிருத்தல் வேண்டும். அவ்வாறிருத்தல் அமைச்சர்க்கு மன்னராலே நிலைபெற்ற செல்வத்தினைக் கொடுக்கும். . போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. 893 அமைச்சர் தங்களைக் காத்துக் கொள்ள நினைத்தால் அரிய பிழைகள் தம்மிடம் வாராமல் காத்தல் வேண்டும். அவை வந்ததாகக் கேட்டு அரசன் சந்தேகப்பட்டு விட்டால் அவ்வரசரைப் பிறகு தெளிவுபடுத்துதல் யாவர்க்கும் அரியதாகும். செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. 694 ஆன்ற பெரியார்கள் அருகில் தாம் இருக்கும்போது அவருக்குத் தெரியுமாறு ஒருவருக்கொருவர் காதிலே சொல்லுவதும், ஒருவர் முகம் நோக்கி மற்றவர் சிரித்துக் கொள்ளுவதும் நீக்கி நடந்து கொள்ளுதல் வேண்டும். எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை, 895 அரசன் பிறரிடம் மறைவாகப் பேசும்போது எதையும் செவி கொடுத்துக் கேளாமல், அரசனிடம் சென்று வினவாமல் இருந்து கொண்டு அரசனே அம்மறைவான செய்திகளைத் தானே சொன்ன்ால் கேட்டல் வேண்டும்.