பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்139



பொருட்பால் அங்க இயல் 141 71. குறிப்பு அறிதல் (ஒருவர் கூறாமல்ேயே அவர் மனத்தில் உள்ளதை அறிதல்) 1. கூறாமை நோக்கிக் குறிப்பு:அறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. 701 அரசன் குறித்த கருத்தினை அவன் கூறாமலேயே முகத்தினாலும் கண்ணினாலும் நோக்கி அறியும் ஆற்றல் உள்ளவன் எப்போதும் கடலால் சூழப்பட்ட வையகத்தில் வாழ்பவர்களுக்கு ஒர் ஆபரணம் ஆவான். 2. ஐயப் படாஅது அகத்தது உணர்வானை தெய்வத்தோடு ஒப்பக் கொளல். 了02 ஒருவன் மனத்தில் உள்ளதைச் சந்தேகமின்றி உணரவல்ல ஒருவனை, மக்களில் அவன் ஒருவனே யானாலும் தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதித்தல் வேண்டும். 3. குறிப்பின் குறிப்பு:உணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். 703 தன்னுடைய குறிப்பு நிகழ்வதை அறிந்து அதனால் பிறனு டைய குறிப்பினை அறியும் தன்மையாளரை, அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவ தொன்றனைக் கொடுத்தாகி லும் துணையாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். 4. குறித்தது கூறாமை கொள்வாரோடு ஏனை உறுப்புஒ ரணையரால் வேறு. 了ó4 ஒருவன் மனத்தில் கருதியதனை அவன் கூறாமலேயே அறிய வல்லவரோடு, மற்றவர்கள் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும் அறிவால் வேறுபடுவர். 5. குறிப்பில் குறிப்பு:உணரா ஆயின் உறுப்பினுள் என்ன பயத்தவே கண். 705 குறித்ததைக் காணவல்ல தம் பார்வையால் பிறர் குறிப்பினை உணரவில்லையானால் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வனவாகும்?