பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

140



திருக்குறளார் தெளிவுரை I 43 10. . அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம், 706 தன்னையடுத்த பொருளினது நிறத்தினைத்தானே கொண்டு காட்டும் பளிங்கினைப் போல ஒருவன் நெஞ்சத்தில் மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். 707 உயிரானது ஒருவனை விரும்பினாலும், வெறுத்தாலும், முகம் தான் அறிந்து முற்பட்டு நின்று உணர்த்தும். ஆதலால், முகத்தினைப் போல அறிவு மிக்கது வேறு ஒன்று இருக்கின்றதோ? (இல்லை என்பதாம்). முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின். 708 மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர்ந்து குறைநீக்க வல்லாரைப் பெற்றால் அவர் தம் முகம் நோக்கும் வகையில், தானும் அவர் முகம் நோக்கி நிற்க அமையும். . பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின், 709 பார்வையால் அறியவல்ல ஆற்றல் படைத்தவரை அரசன் பெற்றிருந்தால், கிடந்த பகைமையினையும் நட்பினையும் வேற்று வேந்தர் சொல்லாவிட்டாலும் அவர்கள் கண்களே சொல்லும், நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்அல்லது இல்லை பிற. 710 'நுண்ணறிவு படைத்துள்ளோம் என்று கூறும் ஆற்றல் உள்ளவர்கள் பிறர் கருத்தினை அளக்கும் கோலாக இருப்பது, ஆராயுங்கால் கண்கள் அல்லாமல் பிற இல்லையாகும்.