பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்141



பொருட்பால் அங்க இயல் 143 72. அவை அறிதல் (அவையினது இயல்பின்ை அறிதல்) 1. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். 711 சொற்களின் & Jogoso அறிந்த தூய்மையினை யுடையவர்கள் தாம் ஒன்று சொல்லும்போது அப்போதுள்ள அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுதல் வேண்டும். 2. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். 712 சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையுடையவர்கள் அவையில் ஒன்று சொல்லும்போது நிலைமையினை ஆராய்ந்து குற்றமில்லாமல் நன்கு தெளிந்து சொல்லுதல் வேண்டும். 3. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகைஅறியார் வல்லது உம் இல், 713 அவையினுடைய அளவினை அறியாமல் ஒன்று சொல்ல முயன்றவர் சொல்லுவதனுடைய கூறுபாடும் அறியார்: கற்றுவல்ல கலையும் அவருக்கு இல்லையாம். 4. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். - 71.4 தம்மைவிடச் சிறந்தவர்கள் இருக்கும் அவைக்கண் (சபையில்) தானும் சிறந்த அறிஞராக விளங்குதல் வேண்டும். புல்லவர்கள் இருக்கும் சபையில் அவர்கள் மதித்தற் பொருட்டு அவர்கள் போலவே ஆதல் வேண்டும். 5. நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. - 715 ஒருவற்கு நல்லது என்ற குணங்கள் எல்லாவற்றிலும் நல்லதாவது எதுவென்றால் தம்மைவிட மிக்கவர்கள் உள்ள அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாததேயாகும், -