பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

142



திருக்குறளார் தெளிவுரை I44 10. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. 716 அகன்ற நூற் பொருள்களை ஆய்ந்துணர வல்லார் அவையில் வல்லானொருவன் சொற்குற்றப்படுதல், நன்னெறிக்கண் நின்றான் ஒருவன் அந்நெறியிலிருந்து நிலை தளர்ந்து வீழ்ந்ததைப் போன்றதாகும். . கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடுஅறச் சொல்தெரிதல் வல்லா ரகத்து. 717 குற்றமின்றிச் சொற்களை ஆராய்வதில் வல்லவர்கள் உள்ள அவைக்கண் சொன்னால், பல நூல்களையும் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். . உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 718 பிறர் உணர்த்தாமல் தாமே உணரவல்ல அறிவினையுடையவர்கள் இருக்கும் அவையில் ஒன்றனைக் சொல்லுதல் தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தது போன்றதாகும். . புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசெலச் சொல்லு வார். 719 நல்லார் இருந்த அவையில் நல்ல பொருட்களை அவ. மனங்கொள்ளுமாறு சொல்லுதற் குரியவர், புல்லர்கள் இருந்த அவையில் அவற்றை மறந்தும் சொல்லாதிருத்தல் வேண்டும். அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல். 72(? நல்லவர்கள். தம் இனத்தவர் அல்லாதார் அவையில் ஒன்றையும் சொல்லாதிருத்தல் வேண்டும். அப்படிச் சொன்னால், அது துய்மையில்லாத முற்றத்தில் அமிழ்தத்தினை ஊற்றுதல் போன்றதாகி விடும்.