பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்143



குட்பல் அங்க இயல் 18 73. அவை அஞ்சாமை (அவையில் அஞ்சாமல் பேசுதல்) 1. வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த துய்மை யவர். 721 சொல்லின் தொகையெல்லாம் அறிந்த துய்மையுடையவர்கள், வல்லவர்கள் நிறைந்த அவை, அல்லாதார் அவை என்னும் வகையினை யறிந்து அச்சத்தால் வழுப்படச் சொல்ல மாட்டார்கள். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். 722 கற்றவர்கள் இருக்கும் அவையில் (சடையில்) அஞ்சாமல் தாம் கற்றவற்றைச் சொல்ல வல்லாரைக் கற்றார் எல்லோரையும்விட இவர் நன்கு கற்றவர் என்று உலகத்தார் சொல்லுவார்கள். பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். 723 பகையினை எதிர்த்து அஞ்சாமல் சென்று இறப்பவர்கள் உலகத்தில் பலபேருண்டு; ஆனால், சடைக்கு அஞ்சாமல் சென்று சொல்லவல்லவர்கள் சிலரேயவர். . கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 724 கற்றவர்கள் நிறைந்த அலையில் தாம் கற்றவற்றைச் சொல்லி அவற்றின் மிக்க டொருள்களை மிகுதியாகக் கற்ற அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு. 725 அவையில் அஞ்சாமல் பிறர் சொல்லுவதற்குப் பதிலாகச் சொல்லும் பொருட்டு, சொல் இலக்கண நெறியால் அவை: நூற்களைக் கற்றல் வேண்டும் என்பதாம்.