பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

144



திருக்குறளார் தெளிவுரை 146 6, 10. வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுளின் நுண் அவை அஞ்சு பவர்க்கு. 了26 வன்கண்மை இல்லாதவர்களுக்கு வாளுடன் என்ன தொடர்பு உண்டு? அதுபோல, நுட்பமுள்ளவர்கள் நிறைந்த சபையைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு, கற்ற நூலோடு என்ன தொடர்பு உண்டு? . பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். 727 சொல்லப்பட வேண்டிய சபையினிடத்து அஞ்சுகின்றவன் கற்ற நூலானது, பகை நடுவில், அப்பகைக்கு அஞ்சுகின்ற பேடி பிடித்த கூர்வாளினை ஒக்கும். . பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். 728 நல்லவர்கள் இருந்த அலைக்கண் நல்ல சொற்பொருள்களை ஏற்கும்படி அச்சத்தால் சொல்ல மாட்டாதவர்கள் பலநூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயனுள்ளவர் ஆகார். . கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும் நல்ல ரவை,அஞ்சு வார். r 729 நூல்களைக் கற்றிருந்தும் அவற்றின் பயனறிந்தும் சபைக்கு அஞ்சி ஆங்கே சொல்ல முடியாதவர்கள், உலகத்தாரால் கல்லாதவர்களைவிடக் கடையர் என்று சொல்லப்படுவார்கள். உளர்.எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். 730 அவை (சபை)க் களத்திற்குப் பயந்து தாம் கற்றவற்றை ஏற்கும்படியாகச் சொல்ல மாட்டாதார். உயிர் வாழ்கின்றார் என்றாலும் இறந்தவரொடு ஒப்பாவார்.