பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்145



பொருட்டால் அங்க இயல் 147 74. நாடு (நாட்டின் இயல்புகளும் சிறப்பும்) தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச் செல்வரும் சேர்வது நாடு. 了3筠 குறையாத விளைவு செய்வோரும். தக்க பெரியோர்களும், கேடில்லாத செல்வந்தர்களும் ஒருங்கு வாழ்வதே நாடாகும். . பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. 732 அளவற்ற பொருளுடைமையால் பிற தேசத்தாரும் விரும்பத்தக்கதாகிக் கேடில்லாமையோடு கூடி மிக்க விளைச்சலினை யுடையதே நாடாகும். . பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறைஒருங்கு நேர்வது நாடு. 733 பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் தன்மீது வந்தாலும் அவற்றைத் தாங்கி அதற்குமேல் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் கொடுப்பதே நாடாகும். . உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு, 734 மிக்க பசியும், நீங்காத நேர்யும், அழிவினைத் தரும் பகையும் இல்லாமல் இனிதாக நடப்பதுவே நாடாகும். பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. 735 பற்பல காரணங்களால் மாறுபட்டுக் கூடும் கூட்டங்களும், உடனிருந்தே பாழாக்கும் உட்பகையும், சமயம் வந்தால் வேந்தனை அலைக்கின்ற கொலைத் தொழில் குறும்பரும் இல்லாததே நாடாகும்.